×

ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.212 கோடி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

கேள்வி நேரத்தின் போது கிணத்துக்கடவு எஸ்.தாமோதரன்(அதிமுக) கேள்விக்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேசுகையில், “உறுப்பினர் கூறிய மதுரைவீரன் கோயில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற திருக்கோயில். கடந்த ஆட்சி காலத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதி திருக்கோயில்களின் திருப்பணி எண்ணிக்கை 1,000 திருக்கோயில் என்று இருந்ததை 1,250 திருக்கோயிலாக தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உயர்த்திருக்கின்றார்.

அதோடு மட்டுமல்லாமல் ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்த நிதியை தற்போது இரண்டரை லட்சம் ரூபாயாக உயர்த்தி இருக்கின்றார். உறுப்பினர் கோரிய மதுரைவீரன் கோயிலுக்கும் நிதி வழங்கப்பட்டு பணிகள் ஒரு மாதத்திற்குள்ளாக முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும். ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதி திருக்கோயில்கள் மற்றும் கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணி செய்ய வேண்டி இருந்தால் அதற்கான பட்டியலை தாருங்கள்.

அதையும் இணைத்துக்கொண்டு திருப்பணி செய்து தருகிறோம். இதுவரை 5,000 ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதி திருக்கோயில்கள் மற்றும் 5,000 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு முதல்வர் தலா ரூ.106 கோடி வீதம் ரூ.212 கோடியினை இந்த திராவிட மாடல் ஆட்சியில் வழங்கி இருக்கின்றார் என்றார்.

The post ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.212 கோடி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Adi ,Minister ,P.K. Shekar Babu ,Kinathukadavu S. Damodaran ,AIADMK ,Hindu Religious ,Endowments ,Madurai ,Veeran Temple ,Dravidar ,Adi Dravidar ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...