×

தருமபுரி மாவட்டத்தில் 30ம் தேதி செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேமுதிக தலைமை அறிவிப்பு

சென்னை: தேமுதிக தலைமை வெளியிட்ட அறிக்கை:
தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 30ம் தேதி புதன்கிழமை காலை 9 மணியளவில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, கே.வி.மஹாலில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்துகொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், கழக வளர்ச்சி மற்றும் எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றுகிறார்.

இதில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், துணை செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் மாநில செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post தருமபுரி மாவட்டத்தில் 30ம் தேதி செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேமுதிக தலைமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : 30th Working Committee and General Committee Meeting ,Darumpuri District ,President of the Council ,Chennai ,Demutika Chief Executive Committee and ,General Committee ,Dharmapuri District ,Palakodu ,Velichanthai ,K. V. ,Mahal ,TEMUTIKA SECRETARY GENERAL PREMALATHA ,30th Working ,Committee, ,General ,Committee ,Meeting ,Demudika ,Dinakaran ,
× RELATED வாக்குரிமை என்பது நம்முடைய கடமை அல்ல...