×

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை


திருப்பூர்: அமராவதி பழைய ஆயக்கட்டில் உள்ள முதல் 2 அமராவதி பழைய வாய்க்கால்களான இராமகுளம் மற்றும் கல்லாபுரம் பழைய வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு நாளை முதல் அடுத்த மாதம் 20ம் தேதி வரையிலான காலத்தில் தகுந்த இடைவெளிவிட்டு (42 நாட்களில் 25 நாட்கள் தண்ணீர் திறப்பு, 17 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில்) அமராவதி அணையின் மண்ணணை மதகு வழியாக வினாடிக்கு 50 கன அடி வீதம் மொத்தம் 108.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 2834 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை appeared first on Dinakaran.

Tags : Amravati Dam ,Tiruppur ,Amravati ,Amravati Old Gorge ,Ramakulam ,Kallapuram Old Gorge ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...