×

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா சாம்பியன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்று வந்த சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டி இன்று நடந்தது. இதில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை சோபியா கெனினுடன் மோதினார். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஜெசிகா 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் சோபியாவை எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கடந்த வாரம் நடந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சபலென்காவிடம் தோற்ற ஜெசிகா பெகுலா 2வது இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : CHARLESTON OPEN TENNIS ,JESSICA BEGULA ,Washington ,United States ,Jessica Pegula ,Sophia Kenin ,Jessica ,Dinakaran ,
× RELATED விசாகப்பட்டினத்தில் இன்று...