- உத்திரப்பிரதேசம்
- இந்துத்துவா
- ராம் நவமி நாள்
- Prayagraj
- சையத் சலார்
- ஹாஜி தர்கா
- ஸ்ரீ
- குங்குமப்பூ
- தின மலர்
உத்தரப்பிரதேசம்: பிரயாக்ராஜில் ராம நவமியை கொண்டாடும்போது மசூதியின் மீது ஏறி காவிக் கொடிகளை ஏந்தியவாறு இந்துத்துவா அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். பைக்கில் பேரணியாக சென்றவர்கள் அங்குள்ள சையத் சலார் ஹாஜி தர்ஹா மீது ஏறி ”ஜெய் ஸ்ரீ ராம்” என முழக்கமும் எழுப்பினர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் சிக்கந்தராவில் முஸ்லிம்களின் தர்கா அமைத்துள்ளது. ராமநவமி அன்று இந்த தர்காவில் இந்து அமைப்பினர் காவிக் கொடி ஏற்றிவிட்டுத் தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வ்ருகின்றனர். ராம நவமியை கொண்டாடும் விதமாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்ட கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் காலையிலிருந்தே சிறப்பு வழிபாடு மற்றும் மத நிகழ்ச்சிகள் மேற்கொன்டு வந்துள்ளனர்.
ஊர்வலங்களில் கலந்து கொண்டவர்கள் ‘‘ஜெய் ஸ்ரீ ராம்’’ கோஷத்துடன் காவிக் கொடிகள் ஏந்திச் சென்றனர். ராம பக்தி இசை மற்றும் ராமாயணக் காட்சிகளை சித்தரிக்கும் அலங்கார ஊர்திகளும் ஊர்வலங்களில் இடம்பெற்றுள்ளது. ராமநவமி நாட்களில் உ.பி.,யின் பல பகுதிகளில் கடந்த காலங்களில் கலவரம் நடைபெற்றதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காவல்துறையினர் விழிப்புடன் இருந்து மாநிலம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மேலும் உ.பி காவல்துறையினருடன் அதன் சிறப்பு படையான பிஏசியினரும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர். முக்கியப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பில் ஈடுபட்டனர்.
பிரயாக்ராஜின் எல்லையிலுள்ள சிக்கந்தரா பகுதியில் சையத் சலார் ஹாஜி தர்ஹா அமைந்துள்ளது. இங்கு திடீரென வந்த சில இந்து அமைப்பினர் தர்காவின் கூரையில் காவிக் கொடியை ஏற்றினர். பின்பு தர்காவின் உச்சியில் ஏறி நின்றவர்கள் காவிக் கொடிகளை அசைத்து கோஷங்களையும் எழுப்பினர். இந்நிகழ்வைக் காட்சிப் பதிவுகளாக்கி அவற்றை சமூக வலைதளங்களிலும் பரப்பினர். இதன்காரணமாக அப்பகுதியில் இஸ்லாமியர்களும் வந்துவிட பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த தகவல் கிடைத்து போலீசார் வந்து நடவடிக்கை எடுப்பதற்குள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இவர்களில் சிலர் பிரயாக்ராஜின் சுஹல்தேவ் சுரக்ஷா சமான் மன்ச் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து உ.பி. காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
The post உத்திரபிரதேசத்தில் ராம நவமியை முன்னிட்டு மசூதி மீது காவிக் கொடி ஏந்தி முழக்கம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.
