×

பொருளாதாரத்தில் தமிழகம் 9.69% என்ற உச்சம் முதல்வர் உழைப்புக்கு கிடைத்த பரிசு: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

சென்னை: பொருளாதாரத்தில் தமிழகம் 9.69 சதவீதம் என்ற உச்சத்தை பிடித்துள்ளது முதல்வரின் உழைப்புக்கு கிடைத்த மகத்தான பரிசு என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசின் தரவுகளின்படி தற்போது பொருளாதாரத்தில் தமிழகம் 9.69 சதவீதம் என்ற உச்சத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலமாக ஒளிர்கிறது.

2023-24ம் ஆண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி), 2024-25ம் ஆண்டில் ரூ.17,23,698 கோடியாக வளர்ந்துள்ளது. இப்போது தமிழகத்தின் எந்த இடத்திலும் தொழிற்சாலைகளை நிறுவலாம். ஏனென்றால் அந்த தொழிற்சாலை வளர்வதற்கான திறன் உள்ளவர்கள் அங்கும் இருக்கிறார்கள். அப்படி தமிழகத்தை முதல்வர் செதுக்குகிறார். இதற்கு உதாரணமாக நான் முதல்வன் திட்டத்தை கூறலாம். இந்த திட்டங்கள் சரியாக நடைபெற்று வருவதினால் இந்த 4 ஆண்டு முடிவில் இப்படி ஒரு வளர்ச்சியை நாம் பெற்றுள்ளோம்.

இது முதல்வரின் உழைப்புக்கு கிடைத்த மகத்தான பரிசு. தமிழகம் 9.69 சதவீதம், ஆந்திரா 8.21, ராஜஸ்தான் 7.82, கர்நாடகா 7.37, தெலங்கானா 6.79, மராட்டியம் 7.27 சதவீதம் என பொருளாதார வளர்ச்சி உள்ளது. ஒன்றிய அரசின் அரவணைப்பில் உள்ள மாநிலங்கள் கூட குறைவான வளர்ச்சியை கண்டுள்ளன. ஆனால் ஒன்றிய அரசின் நிதி பெறாத மாநிலமான தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.  ஒன்றிய அரசு பாரபட்சம் பார்க்காமல் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ வளர்ச்சியை நாம் அடைந்திருக்க முடியும்.

தமிழகத்தை வஞ்சிப்பது என்பது இந்தியாவின் வளர்ச்சியையும் வஞ்சிப்பதாக அமைகிறது. நமது போட்டியெல்லாம் மற்ற நாடுகளுடன்தான். அந்த அளவில் முன்னேறுகிறோம். அமெரிக்கா தற்போது உயர்த்தியுள்ள ஏற்றுமதி வரியினால் நமக்கு என்ன பாதகம் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். முழுமையான புரிதல் அதில் இன்னும் கிடைக்கவில்லை. வெற்றி பெற்றதாக நினைத்து உட்கார்ந்துவிட போவதில்லை. தொடர்ந்து உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

The post பொருளாதாரத்தில் தமிழகம் 9.69% என்ற உச்சம் முதல்வர் உழைப்புக்கு கிடைத்த பரிசு: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Minister ,T.R.P.Raja ,Chennai ,Industries Minister ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்