×

சென்னை விமானநிலைய சுங்கத்துறை உயரதிகாரிகள் 10 பேர் கூண்டோடு இடமாற்றம்!!

சென்னை: சென்னை விமானநிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் உள்பட உயரதிகாரிகள் 10 பேர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுங்கத்துறை முதன்மை ஆணையர் சீனிவாச நாயக், கூடுதல் துணை ஆணையர் பெரியண்ணன், சுங்கத்துறை துணை ஆணையர்கள் சரவணன், பனீந்திர விஷ்சபியாகாதா, அஸ்வத் பாஜி, பாபுகுமார் ஜேக்கப், சுங்கத்துறை துணை ஆணையர் அஜய் பிடாரி, உதவி ஆணையர்கள் சுதாகர் ஆகியோர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமானநிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக தமிழ்வளவன் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post சென்னை விமானநிலைய சுங்கத்துறை உயரதிகாரிகள் 10 பேர் கூண்டோடு இடமாற்றம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai Airport Customs ,Chennai ,Principal Commissioner ,Customs ,Srinivasa Nayak ,Additional ,Deputy Commissioner ,Periyannan ,Deputy Commissioners of Customs Saravanan ,Panindra Vissapiyakatha ,Aswath Bhaji ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூரில் கயிறு, பானை விற்பனைக்கு குவிப்பு