- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் ஆசியா
- ஜெசிகா
- டேனியல் தீவு
- ஜெசிகா பெகுலா
- சார்ல்ஸ்டன் ஓப்பன்
- அமெரிக்காவின் டேனியல் தீவு...
- தின மலர்
டேனியல் ஐலேண்ட்: சார்லஸ்டோன் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் நேற்று அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் டேனியல் ஐலேண்ட் நகரில் மகளிர் மட்டுமே பங்கு பெறும் சார்லஸ்டோன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா, ஆஸ்திரேலியா வீராங்கனை அஜிலா டோம்ல்ஜனோவிக் மோதினர்.
அற்புதமாக ஆடிய பெகுலா, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் சீன வீராங்கனை ஸெங் குவின்வென், பெல்ஜியம் வீராங்கனை எலிஸே மெர்டென்ஸ் மோதினர். இருவரும் சளைக்காமல் ஆடியதால் முதல் இரு செட்களில் தலா ஒன்றை இருவரும் கைப்பற்றினர். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை ஸெங் வசப்படுத்தினார். அதனால, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற ஸெங் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
The post சார்லஸ்டோன் ஓபன் டென்னிஸ் ஈசியா வென்ற ஜெஸிகா காலிறுதிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.
