- திருவள்ளூர் ஞானசித்தி விநாயகர் கோவில்
- Kumbabishekam
- திருவள்ளூர்
- ஞானசித்தி விநாயகர் கோயில்.
- ஞானவித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
- சி.வி. நாயுடு சாலை
- ஏ. லாலு
- மங்கள வாத்தியம்
- ஞானசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

திருவள்ளூர்: திருவள்ளூர், சிவி நாயுடு சாலையில் அமைந்துள்ள ஞானவித்யாலயா மெட்ரி மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள ஞான சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் பள்ளி தாளாளர் ஏ.லாலு தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை மங்கள வாத்தியம், விக்னேஸ்வர பூஜை, யஜமான சங்கல்பம், கோ பூஜை, வாஸ்து பூஜை, பிரவேசபலி, நாடி சந்தானம், முதல்கால யாக சாலை பூஜை, சதுர்வேத பாராயணம், விசேஷ ஹோமங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், கலச ஆவாஹனம், விசேஷ ஹோமங்கள், மஹா தீபாராதனை நடைபெற்றது. 7 மணிக்கு கடம் புறப்பாடும், 7.15 மணிக்கு விமான கோபுரம் மற்றும் சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து அபிஷேகம், ஆராதனையும், பிரசாத விநியோகம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் காலை 11 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எஸ்.ராமகிருஷ்ணன் ஞானம்மாள் அறக்கட்டளை தாளாளர் ஏ.லாலு, செயலாளர் பி.வி.சண்முகன், பொருளாளர் டாக்டர் கே.வி.ஜெகதாம்பிகா, அறங்காவலர் எல்.எஸ்.குணா ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post திருவள்ளூர் ஞானசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.
