×

காரல் மார்க்ஸுக்கு சிலை, மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் நிறுவப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரமுத்து நன்றி..!!

சென்னை: காரல் மார்க்ஸுக்கு சிலை, மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் நிறுவப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்நாட்டு அரசுக்கும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்
உலகத் தொழிலாளர்களின் சார்பிலும்
ஒடுக்கப்பட்ட கல்வி மறுக்கப்பட்ட
மக்களின் சார்பிலும்
நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

மதங்களைத் தாண்டி மதம் அல்லாத
ஓர் உழைக்கும் மதத்தை நிறுவிய
மாமேதை கார்ல் மார்க்சுக்கு
உண்டாக்கப்படும் உருவச்சிலை
வேர்வைக்கு எழுப்பப்படும்
வெற்றிச் சின்னமாகும்

பி.கே.மூக்கையாத்தேவருக்கு
எழுப்பப்படும் மணிமண்டபம்
நாங்கள் குற்றப் பரம்பரையல்ல
கொற்றப் பரம்பரை என்று
குன்றின்மேல் நின்றுகூவும்
பிரமலைக் கள்ளர்களின்
பிரகடனமாகும்

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர்
இந்த இரண்டு செயல்களாலும்
இன்னும் இன்னும் உயர்கிறார்

வரவேற்கிறேன்;
வாழ்த்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post காரல் மார்க்ஸுக்கு சிலை, மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் நிறுவப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரமுத்து நன்றி..!! appeared first on Dinakaran.

Tags : Vairamuthu ,Chief Minister ,M.K. Stalin ,Karl Marx ,Chennai ,Poet Vairamuthu ,Tamil Nadu government ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை