×

தூத்துக்குடியிலும் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி: இதேபோல் தூத்துக்குடியில் காவல்துறையை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வக்கீல்கள் தொழிலுக்கு இடையூறு ஏற்படும் விதமாக செயல்படும் தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதனை கண்டித்தும், தென்பாகம் எஸ்ஐ முத்தமிழ் அரசன் பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் வக்கீல்கள் கடந்த 3 நாட்களாக கோர்ட் பணிகளை புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தூத்துக்குடி நீதிமன்ற நுழைவுவாயில் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு தலைமை வகித்தார். நிகழ்வில் வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் தொல்காப்பியன், செயலாளர் செல்வின், வக்கீல்கள் அசோக், வாரியர், ரூபராஜா, கிறிஸ்டோபர் விஜயராஜ், வாரியார் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

The post தூத்துக்குடியிலும் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Toulouqudi ,Thoothukudi ,Thoothukudi Town ASP ,Tenbagam ,SI ,Mustamil Rasan ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி