×

ராதாபுரம் தொகுதியில் சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் விரைவில் தொடக்கம்

ராதாபுரம், ஏப்.4: ராதாபுரம் தொகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் வளர்ச்சிப்பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது என்று அமைச்சர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் உறுதி அளித்தார். நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி ஆகியோர் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

அதில், ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விஜயாபதி, தெற்கு கள்ளிகுளம், நவ்வலடி, உவரி ஆகியவற்றில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறவுள்ள வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டனர். இந்த மனுவை பரிசீலித்த சுற்றுலாத்துறை அமைச்சர் பனைமரத்துபட்டி ராஜேந்திரன், தெற்கு கள்ளிகுளம், விஜயாபதியில் டெண்டர் விடப்பட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. நவ்வலடி, உவரியில் வளர்ச்சிப்பணிகளுக்கு விரைவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு இந்த நிதியாண்டிலே பணிகள் முடிக்கப்படும்’ என்றார். அப்போது மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கனகராஜ், சென்னை களிகை சங்க பெருளாளர் ஜூலியஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post ராதாபுரம் தொகுதியில் சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் விரைவில் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Radhapura ,RADHAPURAM, AP.4 ,MINISTER ,PANIMARATHUPATTI RAJENDRAN ,RADHAPURAM ,Nella District ,Panchayat ,V. S. R. Jegadis ,Union Secretary ,Joseph Belsi ,Chennai ,Chief Secretariat ,Speaker ,Radhapura Block ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை