×

‘நீட்’ பயிற்சி மாணவி தற்கொலை

இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியம், புதுப்பாளையம் பெரியமுத்தையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (43). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு சத்யா(18) என்ற மகள், துளசிநாத் என்ற மகன் உள்ளனர். சத்யா ஜலகண்டாபுரத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில், கடந்த 10 மாதமாக படித்து வந்தார்.

தன்னால் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை என அடிக்கடி பெற்றோரிடம் புலம்பி வந்துள்ளார். பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில், கடந்த 31ம் தேதி, சத்யா எறும்பு பவுடரை குடித்து மயங்கி விழுந்தார். இதையறிந்த செல்வராஜ், உடனடியாக மகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார்.

The post ‘நீட்’ பயிற்சி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Selvaraj ,Pudupalayam Periyamuthaiyampatti, Konganapuram Union ,Edappadi, Salem district ,Chandra ,Sathya ,Tulasi Nath ,Jalakandapuram… ,
× RELATED புத்தாண்டு நாளில் வணிகர்கள் தலையில்...