×

திருவாடானை அருகே பைக் மீது டிராக்டர் மோதி முதியவர் பலி

திருவாடானை, ஏப். 4: திருவாடானை அருகே பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில், முதியவர் ஒருவர் பரிதாபமாக பலியானார். திருவாடானை அருகே கோடனூர் ஊராட்சி, கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (71). இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் திருவாடானை – பாண்டுகுடி நெடுஞ்சாலையில் வாணியேந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது பின்னால் வந்த டிராக்டர் திடீரென அவரது பைக் மீது மோதியது. இதனால் தலையில் பலத்த காயடைந்து உயிருக்கு போராடிய அவரை, திருவாடானை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே சண்முகம் பரிதாபமாக பலியானார். திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

The post திருவாடானை அருகே பைக் மீது டிராக்டர் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : THIRUWADAN ,Thiruvadanai ,Thiruvadan ,Sanmugam ,Kiliur, Kodanur Oratchi ,Thiruvadana ,
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...