×

ஒட்டன்சத்திரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

ஒட்டன்சத்திரம், ஏப். 4: ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக்கிளை தலைவர் பத்மாவதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கொடுத்த கோரிக்கை மனுவை கசக்கி எறிந்த பெரம்பலூர் மாவட்ட கலெக்டரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர், மகாராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன், வட்டக்கிளை தலைவர் சிவனேசன், செயலாளர் பரமேஸ்வரன், துணை தலைவர் நதியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Employees' Associations ,Ottanastra ,Ottansatram ,Ottansatram Dasildar Office ,Tamil Nadu Civil Servants Association ,Patmawati ,Rural Development Department ,Government Employees Association ,Otanastra ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்