×

செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: 11ம் தேதி தேரோட்டம்

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் பக்தர்களால் பெருமையோடு வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா நேற்று மாலை விநாயகர் வழிபாடு வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து இன்று காலை 5.45 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மேலும் கொடி மரத்திற்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களின் “அரோகரா அரோகரா” கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. விழாவில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், இரூர், பாடாலூர், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மங்கூன், பொம்மனப்பாடி, சத்திரமனை, மாவிலிங்கை உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதில் திருக்கோயில் பணியாளர்கள், கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தினமும் இரவில் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் புறப்பாடு நடக்கிறது. வருகிற 9-ம் தேதி (புதன்கிழமை) திருக்கல்யாணம் உற்சவம்,10-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு வெள்ளி மயில், குதிரை வாகனத்திலும், அலங்காரப்பல்லக்கிலும் சுவாமிகள் திருவீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.45 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 12-ம்தேதி மாலை 6 மணிக்கு தேர் நிலைக்கு வந்தடைகின்றன.

The post செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: 11ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Bunguni Uthra Festival Flagging ,Setikulam Dandayudapani ,Swami Temple ,Kolakalam ,11th ,Dandayudapani Swami Temple ,Vadpalani ,Alathur Taluga Settikulam ,Perambalur district ,Panguni Utdrath Festival ,Vinayagar Worship ,Vastu Shanti ,Panguni Uttra Festival ,Setikulam ,Dandayudapani Swami ,Temple ,Kolakalam: Devotam on 11th ,
× RELATED திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண்...