×

பங்குனி கிருத்திகையை முன்னிட்டு பிரம்ம புரீஸ்வரர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

பெரம்பலூர், ஏப் 3: பெரம்பலூர் நகராட்சியில் துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் வள்ளி தெய்வானை முருகனுக்கு பங்குனி கிருத்திகையை முன்னிட்டு நேற்று (2 ம் தேதி) காலை10.30 மணியளவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு பால், தயிர், சந்தனம், வாசனைத் திரவியங்கள் மற்றும் பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், ராஜமாணிக்கம், தின, வார,வழிபாட்டு குழுவினர் மற்றும் பெரம்பலூர், துறை மங்கலம், அரணாரை, எளம்பலூர், விளாமத்தூர், சிறுவாச்சூர், நொச்சியம், நெடுவாசல், கல்பாடி, 4-ரோடு சுற்றுவட்டாரப் பகுதி களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர். பூஜைகளை முல்லை சிவாச்சாரியார் செய்து வைத்தார்.

The post பங்குனி கிருத்திகையை முன்னிட்டு பிரம்ம புரீஸ்வரர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Lord Murugan ,Brahma Pureeswarar Temple ,Panguni Krithigai ,Perambalur ,Akilandeswari Sametha Brahma Pureeswarar Temple ,Thuraiyur Road ,Perambalur Municipality ,Valli Deivanai ,Panguni Krithigai… ,Brahma ,Pureeswarar ,Temple ,Panguni ,Krithigai ,
× RELATED தேர்வு மையத்தில் ஐஜி, எஸ்பி ஆய்வு; கடும் பனிப்பொழிவு குளிரால் மக்கள் அவதி