×

பாண்டி பஜாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துணை மேயர் ஆய்வு


சென்னை: சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், தணிகாசலம் சாலை, பாண்டி பஜாரில் உள்ள பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தத்தின் செயல்பாடுகளை துணை மேயர் மு. மகேஷ் குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, மதிப்பிற்குரிய துணை மேயர் அவர்கள் பாண்டி பஜாரில் உள்ள நடைபாதை வணிக வளாகத்தினைப் பார்வையிட்டு, அதனை மேம்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் கலந்துரையாடி அறிவுரைகளை வழங்கினார்.

இந்த ஆய்வுகளின்போது, துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் கே.ஏழுமலை, மேற்பார்வை பொறியாளர் (பூங்கா) டி.அன்பழகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post பாண்டி பஜாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துணை மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Bandi Bazaar ,Chennai ,Deputy ,Mayor ,MLA ,Pannatuk Automatic Parking ,Chennai Municipality ,Kodambakkam Zone ,Tanikasalam Road ,Mahesh Kumar ,Dinakaran ,
× RELATED இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி:...