×

சென்னை ஐசிஎப் ஆலை 2024-2025ம் நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து புதிய சாதனை!!

சென்னை : சென்னை ஐசிஎப் ஆலை 2024-2025ம் நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை ஐசிஎப் திகழ்கிறது. இந்த ஆலையில் வந்தே பாரத் பெட்டிகள் எல்.எச்.பி என்னும் நவீன பெட்டிகள், ஏசி மின்சார ரயில், மெமு ரயில் பெட்டிகள் உள்பட பல்வேறு வகைகளில் 70,000 மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இங்கு தற்போது வந்தே பாரத் ரயில்கள், அம்ரித் பாரத் ரயில்கள், எல்எச்பி ரயில் பெட்டிகள், ஏசி மின்சார ரயில்கள் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த ஆலையில் கடந்த நிதியாண்டில் 2,829 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு இருந்தன. இந்து ஆண்டு ஆலையில் 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த ஆலையில் 2024-2025ம் நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து புதிய உற்பத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊழியர்களுக்கு ஐசிஎப் பொது மேலாளர் சுப்பாராவ் இனிப்பு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

The post சென்னை ஐசிஎப் ஆலை 2024-2025ம் நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து புதிய சாதனை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ICF ,Chennai ,Vande Bharat ,LHP… ,Dinakaran ,
× RELATED தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே...