×

208 நகர்ப்புற நலவாழ்வு மையம் இம்மாத இறுதிக்குள் திறப்பு

பேரவையில் திரு.வி.க.நகர் எம்எல்ஏ தாயகம் கவி (திமுக) பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எத்தனை நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘2022ம் ஆண்டு மே 7ம் தேதி முதல்வர் இந்த அறிவிப்பு செய்தார். ஒரே ஆண்டில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மீதமுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டும் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் அவை திறக்கப்படும்’’ என்றார்.

The post 208 நகர்ப்புற நலவாழ்வு மையம் இம்மாத இறுதிக்குள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : 208 Urban Wellness Centers ,Thiru.V.K.Nagar ,MLA ,Thayakam Kavi ,DMK ,Tamil Nadu ,Minister of Public Welfare… ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...