- தெற்கு மாநிலங்கள்
- யூனியன் அரசு
- கேரளா
- நிதி அமைச்சர்
- நெல்லை
- பாலகோபால்
- மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு
- மதுரை…
- தெற்கு
- கேரள நிதி அமைச்சர்
- தின மலர்
நெல்லை: ‘ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது’ என்று நெல்லையில் கேரள நிதியமைச்சர் பாலகோபால், கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பேபி ஆகியோர் தெரிவித்தனர். மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக கேரள மாநில நிதியமைச்சர் பாலகோபால் மற்றும் அக்கட்சியின் அகில இந்திய அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்ஏ பேபி ஆகியோர் நெல்லைக்கு நேற்று வந்தனர்.
அப்போது அவர்கள் கூட்டாக அளித்த பேட்டி: பிரதமர் மோடி வயது மூப்பு காரணமாக பதவி விலக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் மக்களாலேயே பதவியில் இருந்து நிரந்தமாக தூக்கியெறியப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் தான் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு இந்திய மொழி மூலம் மற்றொரு இந்திய மொழியை அழிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.
ஒரு மொழியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக் கூடாது. பா.ஜ. அரசு அரசியலமைப்பு சட்டம், கூட்டாட்சி, மக்களாட்சி தத்துவத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஒரு சில பிராந்தியம் மட்டுமே தொகுதி மறுசீரமைப்பில் கூடுதல் பலன் பெறுகிறது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். ஆனால் அவர் சொல்வதை நம்ப முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை மூலம் தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது: கேரள நிதி அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.
