×

சென்னை, கோவை போன்ற நகரங்களில் 40, 50 மாடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டும்: துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்விக்கு அமைச்சர் பதில்


சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசுகையில் “டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் 40, 50 மாடியில் வீடுகள் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டுகிறது. சென்னையில் கூட 40, 50, 60 மாடியில் தனியார் நிறுவனங்கள் அடுக்குமாடிகள் கட்டுகின்றனர். சென்னை, கோவை போன்ற இடங்களில் அந்தளவு உயரமான கட்டடங்களை வீட்டு வசதி வாரியம் மூலம் கட்ட வேண்டும். அவ்வாறு வீடுகள் கட்டினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தனியார் வீடுகளின் விலை குறையும் “ என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் முத்துச்சாமி, “வீட்டு வசதி வாரியத்திற்கு இடம் இருந்தால் முடிந்தவரை வீடுகளை பல மாடிகளாக கட்டுகிறோம். ஒரு பகுதியல் சாலையின் அகலம், விமான நிலையம் போன்றவற்றை பொறுத்துதான் எத்தனை மாடியில் வீடு கட்ட முடியும் என்பதை தீர்மானித்து வருகிறோம். எப்எஸ்ஐ பொறுத்து அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர் கூறியது கவனத்தில் கொள்ளப்படும். எம்எல்ஏவின் கருத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதில் அளித்தார்.

The post சென்னை, கோவை போன்ற நகரங்களில் 40, 50 மாடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டும்: துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்விக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Coimbatore ,Deputy Speaker ,Pichandi ,Tamil ,Nadu Legislative Assembly ,K. Pichandi ,Delhi ,Mumbai ,Housing Board ,Minister ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...