×

உ.பி. முதல்வருக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி..!!

சென்னை: உத்தரப் பிரதேச பள்ளிகளில் தமிழ் பாடம் கற்றுக் கொடுக்க எவ்வளவு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார். உத்தரப் பிரதேசத்தில் எத்தனை மாணவர்கள் தமிழை மொழி பாடமாக எடுத்து படிக்கின்றனர்?. தமிழ்நாட்டில் இந்தியை மாணவர்கள் கட்டாயமாக கற்க வேண்டும் என்பதற்கு எந்த காரணமும் இல்லை. தமிழ்நாடு வரும் புலம் பெயர் தொழிலாளர்கள் யாரும் தமிழ் தெரிந்து இங்கு பணிபுரிய வருவதில்லை. தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதாக அரசியல் லாபத்துக்காக தலைவர்கள் கூறுவதாக யோகி ஆதித்யநாத் பேட்டி அளித்திருந்தார். உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. பதிலடி தெரிவித்தார்.

The post உ.பி. முதல்வருக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி..!! appeared first on Dinakaran.

Tags : UP ,Chief Minister ,Karti Chidambaram ,Chennai ,Uttar Pradesh ,Tamil Nadu… ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...