×

திமுக ஆட்சியில் பல்வேறு சலுகைகள் கோட்டை நோக்கி 15ம் தேதி அணிவகுப்பு: சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் மற்றும் ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பேரணியாக சென்று சந்தித்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை வருகிற 15ம் தேதி செலுத்த உள்ளோம். தொடர்ந்து, கலைஞரின் ஆட்சி காலத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வாரி வழங்கிய சலுகைகளை நினைவூட்டும் வண்ணம் அணிவகுக்கும் பேரணி ஏப்ரல் 15ம் தேதி நடைபெற உள்ளது.
கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு, கோட்டையை நோக்கி தாரை தப்பட்டை முழக்கத்துடன் அணிவகுக்க உள்ளோம். இதுதொடர்பான ஆலோசனை அனைத்து சங்கங்களுடனும் வரும் 6ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக ஆட்சியில் பல்வேறு சலுகைகள் கோட்டை நோக்கி 15ம் தேதி அணிவகுப்பு: சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Association of Sathinavu, Anganwadi Employees Association ,Chennai ,State Coordinator ,Tamil Nadu ,Sathunav ,Anganwadi ,Retired ,Anganwadi Workers' Federation ,Varadarajan ,Chief Mu. K. ,Tamil New Year's Day ,Stalin ,Sathinavu, Anganwadi Staff Association ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...