- கோவில்பாட்டி பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு
- கோவில்பட்டி
- கோவில்பட்டி லட்சுமி அம்மல்
- பாலிடெக்னிக்
- கல்லூரி
- KR கல்வி நிறுவனங்கள்
- கே. ஆர் அருணாச்சலம்
- அம்பாசமுத்திரம்
- மாவட்ட அபிவிருத்தி அலுவலர்
- முதல்வர்
- லட்சுமி அம்மல் பாலிடெக்னிக்
கோவில்பட்டி, மார்ச் 30: கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் 41வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர் அருணாசலம் தலைமை வகித்தார். அம்பாசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலரும் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் மாணவருமான பாப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டு சிறப்புரையாற்றினார். அதில் உடல் ஆரோக்கியத்தை நன்றாக பேணுவதற்கு, விளையாட்டு உடற்பயிற்சியாக அமைகிறது என்றும், கல்வி மட்டும் இல்லாது விளையாட்டிலும் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். மேலும் யோகாவின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார்.
கல்லூரி உடற்கல்வி இயக்குநர் விளையாட்டு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பல்வேறு தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் மாணவர்களுக்கான தனி நபர் விளையாட்டுப்போட்டிக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை மூன்றாமாண்டு மின்னியல்துறை மாணவர் முகிலன் தட்டி சென்றார். மாணவிகளுக்கான தனி நபர் விளையாட்டுப்போட்டிக்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டாமாண்டு மின்னணுவியல்துறை மாணவி ஹரணி தட்டி சென்றார். பச்சை நிற அணி குழு விளையாட்டு போட்டிக்கான கேடயத்தை பெற்றது. சிவப்பு நிற அணி தனி நபர் விளையாட்டுப்போட்டிக்கான கேடயத்தை பெற்றது. ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பச்சை நிற அணி தட்டிச் சென்றது. விழாவில் நேஷனல் பொறியியற் கல்லூரி இயக்குநர் மற்றும் முதல்வர் கே.ஆர்.கலைக்கல்லூரி முதல்வர், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், ஆசிரிய, அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
The post கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு விழா appeared first on Dinakaran.
