×

ஈரோட்டில் மறைந்த முன்னாள் எம்பியின் நினைவு தினம் அனுசரிப்பு

 

ஈரோடு, மார்ச் 29: ஈரோட்டில் மறைந்த முன்னாள் எம்பி.யின் நினைவு தினத்தையொட்டி மதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.  ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு அருகே உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநகர மாவட்டம் சார்பில் மறைந்த முன்னாள் எம்பி கணேசமூர்த்தியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, கணேசமூர்த்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்பி கிருஷ்ணன், திருப்பூர் முத்துகிருஷ்ணன், பாலு, தாராபுரம் சந்திரசேகர், பவானி அறிவழகன், அந்தியூர் ரகுபதி, வனிதாமணி ஜெயக்குமார், முசிறி ரவிச்சந்திரன் மற்றும் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஈரோட்டில் மறைந்த முன்னாள் எம்பியின் நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Memorial Day ,Erode ,MDMK ,Metropolitan District ,Revival Dravida Munnetra Kazhagam ,Surampatti Nal Road, ,Ganeshamoorthy… ,
× RELATED போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது