×

முதல்வர் பிறந்தநாள் விழா திமுக பொதுக்கூட்டம்

 

ஜெயங்கொண்டம், மார்ச் 29: அரியலூர் மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72ம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கூவத்தூர் கலைஞர் திடலில் நடைபெற்றது. ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமை வகித்தார். முன்னதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டேவிட் வரவேற்று பேசினார். திமுக தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரும், அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து இளம் பேச்சாளர் மோகன், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், திமுக சட்டத்திட்ட திருத்த குழு இணை செயலாளர் சுபா சந்திரசேகர், சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் கலாசுந்தரமூர்த்தி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தர்மதுரை, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கே.சி.லூயிகதிரவன், மாவட்ட பிரதிநிதி சிவமுத்து, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பானுமதி ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் டிஎம்டி அறிவழகன், மாவட்ட மேலிட ஒன்றிய மேற்பார்வையாளர் ரவிக்குமார் உள்ளிட்ட மாவட்ட அணி நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகள், ஒன்றிய அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதியும் முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினருமான சேவியர் சஞ்சீவிகுமார் நன்றி கூறினார்.

The post முதல்வர் பிறந்தநாள் விழா திமுக பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister's ,Celebration DMK Public Meeting ,Jayankondam ,Ariyalur District DMK ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Koovathur Kalaignar Thidal ,Andimadam ,South Union ,Kaliyaperumal ,Birthday Celebration DMK Public Meeting ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்