×

முத்துப்பேட்டையில் நுகர்வோர் கண்காணிப்பு குழு கூட்டம்

 

முத்துப்பேட்டை, மார்ச் 28: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் துறை சார்பில் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கண்காணிப்பு குழு கூட்டம் வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி தலைமையில் நேற்று நடைபெற்றது. முத்துப்பேட்டை நுகர்வோர் பாதுக்காப்பு மைய தலைவர் தம்புசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பேசுகையில் முத்துப்பேட்டை மீன் மார்க்கெட் பகுதியை தூய்மை படுத்த வேண்டும், சாலையோர கடைகளை கட்டுபடுத்த வேண்டும், புதிய பேரூந்து நிலையம் பகுதியை தூய்மை படுத்த வேண்டும், அங்குள்ள மாற்று திரனாளி கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,

தெற்குகாடு அங்கன்வாடிக்கு கட்டிடம் கட்டித்தர வேண்டும், கேன் வாட்டர் விலை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது இதனை கட்டுபடுத்த வேண்டும். காவலர் குடியிருப்பு பகுதியிலிருந்து சித்தேரி குளம் வரை குடியிருப்புகளுக்கு வரும் குடிநீரில் சில நேரம் உப்புநீராக வருகிறது இதனை சரி செய்ய வேண்டும் இவ்வாறு சுட்டிக்காட்டி பேசினார்கள் இதற்கு பதிலளித்த வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்யப்படும் என்றார். இதில் வருவாய் அலுவலர் தினேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

The post முத்துப்பேட்டையில் நுகர்வோர் கண்காணிப்பு குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Muthupettai ,Muthupettai Taluka Office ,Tiruvarur district ,District Supply Officer ,Vasumathi ,District Supply Department ,Muthupettai Consumer Protection… ,Consumer Watchdog Meeting ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...