- சூரிய
- கிரகண விழிப்புணர்வு
- காலக்காடு பள்ளி
- Kalakkadu
- களக்காடு நகராட்சி நடுநிலைப்பள்ளி
- நெல்லை ஆஸ்ட்ரோ கிளப்
- வெள்ளி
- வியாழன்
- செவ்வாய்
- பூமியில்
- சூரிய கிரகணம்
- விழிப்புணர்வு முகாம்
- தின மலர்
களக்காடு,மார்ச் 28: களக்காடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நெல்லை அஸ்ட்ரோ கிளப் சார்பில் சூரிய கிரகண விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் மாணவர்களுக்கு வானில் தோன்றும் வெள்ளி, வியாழன், செவ்வாய் கோள்களை எவ்வாறு அடையாளம் காண்பது?, நிலவுக்கும் புவிக்கும் உள்ள தொடர்பு, விண்வெளியில் ஏற்படும் சூரிய, சந்திர நிழல் விளையாட்டு குறித்து விளக்கப்பட்டது. அதன் பின் மாணவர்களுக்கு டெலஸ்கோப் மூலம் மேற்கு தொடர்ச்சி மலை காட்சிகளை கண் அருகில் காண செய்தனர். இதில் மாவட்ட மாதிரி பள்ளி தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் முத்துசாமி, கல்வி கருத்தாளர் தனலட்சுமி, தலைமை ஆசிரியர் செல்வம், ஆசிரியைகள் சுனிதா, ஜமீலா பானு சாந்தி உஷாகுமாரி, வானவில் கருத்தாளர் தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post களக்காடு பள்ளியில் சூரிய கிரகண விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.
