சென்னை: இந்தியா – ரஷ்யா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சிக்காக போர்க்கப்பல்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளன. ரஷ்ய நாட்டில் 3 போர் கப்பல்கள் தற்போது தமிழ்நாட்டின் கடலோர பகுதியான சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன. ரஷ்யாவின் 3 போர் கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படையின் கப்பல்கள் என இரு நாட்டு தரப்பினரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து கடற்படைக்கான கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா – ரஷ்யாவின் கடற்பயிற்சியால் பசுபிக் பெருங்கடல் சென்றுள்ள அநேக கப்பல்கள் சென்னை திரும்புகின்றன. ரஷ்யாவின் பசுபிக் பெருங்கடல் போர் கப்பல்கள் தான் இந்த கூட்டு பயிற்சிக்காக சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளன. கடலோர பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளும் கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு சென்று சந்திக்கும் போது சர்வதேச குற்றங்கள் தடுக்க வேண்டும்.
அதே போன்று கடலோர பகுதிகளில் இருக்கக்கூடிய வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் ரஷ்யா சென்று வந்துள்ள நிலையில் கடலோர பகுதிகளின் வலுவை பாதுகாக்கக்கூடிய வகையிலும் மேலும் அதை கூட்டும் வகையிலும் இரு நாட்டுடன் ஒரு கூட்டு பயிற்சியை மேற்கொள்வதற்காக இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இந்திய அரசு கடற்படையின் கூட்டுப்பயிர்ச்சி 3 ரஷ்ய போர் கப்பல்கள் வந்ததை தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
The post இந்தியா – ரஷ்யா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சிக்காக போர்க்கப்பல்கள் சென்னை வருகை..!! appeared first on Dinakaran.
