×

திருவாடானை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்

திருவாடானை, மார்ச் 27: திருவாடானை அருகே கங்கானரேந்தல் பகுதியில் திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர், மாவட்ட உரிமையியல் நீதிபதி மணீஷ்குமார் உத்தரவின் பேரில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வழக்கறிஞர் ஜெகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு உரையாற்றி சட்ட விழிப்புணர்வு சம்மந்தமான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

The post திருவாடானை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Thiruvadana ,Ganganarenthal ,District Civil Judge ,Manish Kumar ,Thiruvadana Circle Legal Services Committee ,Advocate ,Jagan ,Dinakaran ,
× RELATED புத்தாண்டு கொண்டாட்டம்