×

மஸ்தூர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், மார்ச் 26: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு மாதம் தோறும் 5ம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். வருடம் முழுவதும் வேலை வழங்க வேண்டும்.

பணிக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும். பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். பணியாளர்கள் பணியின் போது விபத்து மற்றும் மரணத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். முன்கள பணியாளருக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

The post மஸ்தூர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Mazdoor Sangam ,Virudhunagar ,Virudhunagar Collector ,Tamil Nadu Mosquito Eradication Mazdoor Sangam District ,President ,Prakash ,
× RELATED வத்திராயிருப்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி