×

கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

தேனி, மார்ச் 26: தேனி அருகே ரத்தினம் நகரில் வாலிபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.  தேனி அல்லிநகரம் வீரப்பஅய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார்(23). பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் விஜய் என்ற விஜி(35). நேற்று முன்தினம் மதியம் சரவணக்குமார் தேனி அருகே ரத்தினம் நகரில் இருந்து சுக்குவாடன்பட்டி செல்லும் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கே நின்றிருந்த விஜி என்ற விஜய், கத்தியைக் காட்டி சரவணக்குமாரிடம் இருந்து ரூ.400ஐ பறித்து கொண்டு மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சரவணக்குமார் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில், போலீசார் விஜி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

The post கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Theni ,Rathinam Nagar ,Saravanakumar ,Veerappaayyanar Koil Street, Allinagaram, Theni ,Vijay ,Saruthupatti North Street ,Periyakulam… ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்