- ரம்ஜான் பெருநாள் தொழுகை
- கம்பம்
- கம்பம் வாவர் பள்ளி ஜமாத் கமிட்டி
- வாவர் மசூதி
- ஜெய்னுலாபுதீன்
- ரம்ஜான் ஈத்
- ரம்ஜான்…
- தின மலர்
கம்பம், மார்ச் 26: கம்பம் வாவேர் பள்ளி ஜமாத் கமிட்டியின் 36வது கூட்டம் தலைவர் ஜெய்னுலாபுதீன் தலைமையில் நேற்று வாவேர் பள்ளிவாசலில் நடைபெற்றது. எதிர்வரும் ரம்ஜான் பண்டிகை பெருநாள் திடல் தொழுகை சமந்தமாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்து. அதன்படி ரம்ஜான் அன்று சரியாக காலை 8 மணி அளவில் வாவேர் பள்ளியில் கம்பம் ஜமாத்தார்கள் அனைவரும் ஒன்று கூடி ஊர்வலமாக ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டில் உள்ள பெருநாள் திடலுக்கு வந்து சேர வேண்டும்.
சரியாக காலை 9 மணி அளவில் ஈத்கா மைதானத்தில் தொழுகை நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் பள்ளி ஜமாத் செயலாளர் நாகூர் மீரான், பொருளாளர் சபியுல்லாஹ், துணைத் தலைவர் ரபிக் மற்றும் அப்துல் சமது, துணைச்செயலாளர் சர்புதீன், அப்துல் காதர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
The post கம்பத்தில் ரம்ஜான் பெருநாள் திடல் தொழுகை: காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.
