×

பள்ளி செல்ல காத்திருந்த மாணவி; பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டையில் தேர்வு எழுதுவதற்காகப் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் முனிராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் உறுதி. பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் செல்லவே, மாணவி பேருந்து பின்னால் நீண்ட தூரம் ஓடிய காட்சி வெளியான நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

The post பள்ளி செல்ல காத்திருந்த மாணவி; பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்! appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Muniraj ,Kothakottai ,Vaniyambadi ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...