- கோவில்பட்டி பள்ளி ஆண்டு விழா
- கோவில்பட்டி
- கோவில்பட்டி கேச்சிலபுரம்
- ஹோலி ஓம் குளோபல் சிபிஎஸ்
- டாக்டர்
- மீனாக்ஷி சுந்தரணா
- லக்ஷ்மநாப் பெருமால்
- உஷாரணி
- சிவரம்
- தின மலர்
கோவில்பட்டி, மார்ச் 25: கோவில்பட்டி கெச்சிலாபுரம் புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் 3ம் ஆண்டுவிழா நடைபெற்றது. டாக்டர் மீனாட்சி சுந்தரனார் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் லட்சுமணப் பெருமாள். செயலாளர் உஷாராணி, இயக்குநர் சிவராம் ஆகியோர் பேசினர். பள்ளி முதல்வர் பொன்தங்க மகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் மாணவ -மாணவிகளின் நடனம், ‘பாண்டா’வின் மிகப்பெரிய தோற்றம், சிப்பிக்குள் இருந்து மாணவிகள் வெளியே வருவது போன்ற அமைப்பு, பரதம், வில்லிசை, தமிழிசை, பக்தி இசை, பறையிசை, யோகா, நாடகம், ஸ்லோகம், பொய்க்கால் குதிரை மற்றும் மழலைகளின் கொஞ்சும் மொழியில் அமைந்த குறள், பாடல் ஆகியவை காண்போரை மெய்சிலிர்க்கும் வகையில் அமைந்தது.போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு புத்தகங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
The post கோவில்பட்டி பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.
