×

திருவாய்மூரில் தியாகராஜர் கோயிலில் பங்குனி தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேகம்

 

கீழ்வேளூர், மார்ச் 24: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூரில் சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்றாக மற்றும் அஷ்டபைரவர் சன்னதியாக விளங்கும் தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது.கோயிலில் காசிக்கு அடுத்தபடியாக சத்ரு சம்ஹார பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், கபால பைரவர், உன்மத்த பைரவர், பீஷண பைரவர் உள்ளிட்ட 8 பைரவர்கள் ஒரே சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மஹா யாகம் சிவாச்சாரியார் பிச்சைமணி தலைமையில் நடைபெற்றது.மஹா பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், குங்குமம் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பைரவருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக வழிபாடு. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

The post திருவாய்மூரில் தியாகராஜர் கோயிலில் பங்குனி தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Thiruvaimoor Temple ,Kilvelur ,Thiruvaimoor ,Thirukuvalai ,Nagapattinam district ,Thyagaraja ,Swamy ,Temple ,Ashta Bhairava ,Kashi ,Chatru ,Bhairava ,Asitanga ,Ruru ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்