×

உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாக பகுதியில் ரூ.1 கோடியே 33 லட்சத்தில் சார்பு நீதிபதி குடியிருப்பு கட்டுமான பணி

*ஆட்சியர் பிரசாந்த் தொடங்கி வைத்தார்

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சார்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டது. இதற்கான நீதிபதியும் நியமிக்கப்பட்டு வழக்குப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதியதாக நீதிமன்ற வளாகத்தின் அருகில் சார்பு நீதிமன்ற நீதிபதி குடியிருப்பு கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் சார்பு நீதிமன்ற நீதிபதி குடியிருப்பு கட்டுமான பணி தொடங்குவதற்கான நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது.

முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி இருசன் பூங்குழலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டு சார்பு நீதிமன்ற நீதிபதி குடியிருப்பு கட்டுமான பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராம், உளுந்தூர்பேட்டை சார்பு நீதிபதி ஆறுமுகம், உளுந்தூர்பேட்டை நீதித்துறை நடுவர் கோமதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மதுமிதா பொதுப்பணித்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாக பகுதியில் ரூ.1 கோடியே 33 லட்சத்தில் சார்பு நீதிபதி குடியிருப்பு கட்டுமான பணி appeared first on Dinakaran.

Tags : Ulundurpet Court Campus ,Ruler Prashant ,Ulundurpet ,Kallakurichi District ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...