×

புதுக்கடை அருகே மனைவியை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட கணவருக்கு அடி

புதுக்கடை, மார்ச் 22: புதுக்கடை அருகே காப்புக்காடு விளாத்துறை ஆர்சி தெருவை சேர்ந்தவர் ரெக் ஷந்த் (25). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிறீமாவை அதே பகுதியை சேர்ந்த டைட்டஸ் (36). என்பவர் அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால் ரெக் ஷந்துக்கும் டைட்டசுக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ரெக் ஷந்த் டைட்டஸை பார்த்து ஏன் என் மனைவியை பற்றி தவறாக பேசுகிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து திடீரென டைட்டஸ் கம்பியை எடுத்து ரெக் ஷந்தை அடித்து காயப்படுத்தி உள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ரெக் ஷந்த் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து டைட்டஸை கைது செய்தனர்.

The post புதுக்கடை அருகே மனைவியை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட கணவருக்கு அடி appeared first on Dinakaran.

Tags : Pudukadai ,Rek Shanth ,Vilathurai RC Street, Kapukadu ,Preema ,Titus ,Rek… ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...