×

அதிமுக வெளிநடப்பு ஓபிஎஸ் புறக்கணிப்பு

சட்டப்பேரவையில் நேற்று, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து தனது கருத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவு செய்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க முயன்றபோது, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்யவில்லை.

காரணம், கடந்த திங்கட்கிழமை சபாநாயகர் அப்பாவு மீது ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் அந்த தீர்மானத்தை ஆதரித்து எழுந்து நின்றார். தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேரும் வாக்களித்தனர்.

இதனால் அதிமுகவில் எடப்பாடி அணியினருடன் இணைந்து பணியாற்ற ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக பரவலாக கூறப்பட்டது. ஆனால், நேற்று எடப்பாடி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தபோது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்யாமல் புறக்கணித்தனர். இதனால், எடப்பாடி – ஓபிஎஸ் பனிப்போர் தொடருவதாகவே கருதப்படுகிறது.

The post அதிமுக வெளிநடப்பு ஓபிஎஸ் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Assembly ,Edappadi Palaniswami ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,O. Panneerselvam ,OPS ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்