×

சுனிதா வில்லியம்சுக்கு புதுச்சேரி சட்டசபை வாழ்த்து

புதுச்சேரி, மார்ச் 20: புதுச்சேரி சட்டசபையில் சபாநாயகர் செல்வம் நேற்று பேசியதாவது: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்களுக்கு மேலாக அங்கேயே தங்கியிருக்க நேர்ந்தது. சுனிதா தனது இந்திய மற்றும் சுலோவீனிய பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக சுலோவீனிய நாட்டின் தேசியக் கொடி, பகவத் கீதை, பிள்ளையார் படத்ைத தன்னுடன் விண்வெளிக்கு கொண்டு சென்றிருந்தார். சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரை பூமிக்கு அழைத்துவரும் பணி தொடங்கியது.

சுனிதா உள்ளிட்டோர் பயணிக்கும் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அவர்கள் பூமிக்கு திரும்பினர். ப்ளோரிடாவின் கடற்பரப்பில் டிராகன் விண்கலம் தரையிறங்கியது. படகில் சென்ற மீட்புப் படையினர் விண்வெளி வீரர்கள் வந்த விண்கலத்தை மீட்டனர். விண்கலத்தில் 17 மணி நேரத்தை செலவிட்ட பின்னர், அனைவரும் பத்திரமாக வெளியே அழைத்துவரப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியா தனது புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்க காத்திருப்பதாக விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்சுக்கு இந்த சட்டப்பேரவை தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது, என்றார்.

The post சுனிதா வில்லியம்சுக்கு புதுச்சேரி சட்டசபை வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Puducherry Assembly ,Sunitha Williams ,Puducherry ,Speaker ,Selvam ,Butch Wilmore ,International Space Station ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...