×

பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றவர் கைது

தர்மபுரி, மார்ச் 20: தர்மபுரி மாவட்டம், அரூர் ஆலம்பாடியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கண்ணன்(39). இவர் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தான் பாட்டிலில் எடுத்து வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்ற முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து விசாரணை நடத்தினர். அதில், அவரது தாத்தாவின் நிலத்தை, பெரியப்பா மகன்கள் பயன்படுத்தி வருவதாகவும், அந்த நிலத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை கொடுக்காமல் மறுத்து வருவதால், அதனை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தீக்குளிக்க முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்றனர். மேலும், அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் திடீரென பெட்ரோலை உடலில் ஊற்ற முயன்றதால், கண்ணனை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

The post பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Manickam ,Kannan ,Arur Alampadi ,Dharmapuri district ,Dharmapuri Collector ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்