×

லோகோ பைலட் தேர்வு கடைசி நேரத்தில் தேர்வை ரத்து செய்த ஆர்.ஆர்.பி: தலைவர்கள் கண்டனம்

சென்னை: நேற்று நடைபெறவிருந்த ஆர்.ஆர்.பி லோகோ பைலட் தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் ரயில்வே துறையில் காலியாக உள்ள 18,799 லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இவர்களுக்கான 2ம் நிலை எழுத்து தேர்வு நேற்று நடைபெற இருந்தது. 2ம் கட்ட தேர்வுக்கு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விளக்கமளித்த ஆர்.ஆர்.பி, அனைத்து தேர்வர்களுக்கும் சொந்த மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்க முடியாததால் அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து தெலங்கானா, ஆந்திராவிற்கு தேர்வு எழுத சென்ற தேர்வர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், கடைசி நேரத்தில் தேர்வை ரத்து செய்து, தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள ஆர்.ஆர்.பி, புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து 1,000 கி.மீ கடந்து சென்று தெலங்கானா, ஆந்திராவிற்கு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வளவு தூரம் சென்று தேர்வெழுத வேண்டுமா என்று எண்ணி சில தேர்வர்கள் தேர்வு எழுதகூட செல்லவில்லை. லோகோ பைலட் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மதுரை சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post லோகோ பைலட் தேர்வு கடைசி நேரத்தில் தேர்வை ரத்து செய்த ஆர்.ஆர்.பி: தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : RRB ,Chennai ,Dinakaran ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்