- திமுக
- போடி
- போடி நகர் தி.மு.க.
- தேனி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பக் குழு
- நகரம்
- புருஷோத்தமன்…
- தின மலர்
போடி, மார்ச் 19: போடி நகர் திமுக அலுவலகத்தில் போடி நகர் திமுக, தேனி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைந்து சமூக வலைதளத்தில் துடிப்பாக செயல்படும் விதம் குறித்து நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார்.
தேனி வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் வரவேற்றார். செல்போன்கள் மூலம் பொதுமக்கள் பார்க்கும் விதம் திமுக அரசின் செயல்திட்டங்கள் அனைத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் நகர திமுகவினர், மாவட்ட அளவிலான தகவல் தொழில் நுட்ப அணியினர் பலரும் கலந்து கொண்டனர்.
The post திமுக ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.
