×

மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி

கமுதி, மார்ச் 19: முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில்,மீனவ இளைஞர்கள் 1000 பேர் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படையில் சேர்வதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கொடுக்கப்படும் என கடந்த 2022ம் ஆண்டு அறிவித்து இருந்தார். அதன்படி கமுதி, கடலூர்,கன்னியாகுமரியில் வருடத்திற்கு 120 பேர் தேர்வு செய்யபட்டு பயிற்சி கொடுக்கபடுகிறது. அதன்படி கடலோர பகுதிகளான ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த 40 இளைஞர்களுக்கு கமுதி கோட்டைமேட்டில் உள்ள தனி ஆயுதப்படை வளாகத்தில் மூன்றாம் ஆண்டு 90 நாள் பயிற்சி கொடுக்கும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி தொடங்கி நேற்று நிறைவுபெற்றது.

The post மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Chief Minister ,M.K. Stalin ,Indian Coast Guard ,Indian Navy ,Kamudi, ,Cuddalore ,Kanyakumari… ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்