×

குமரி மாவட்டத்தில் கால்வாய்களை சீரமைக்க தனி கவனம் சட்டசபையில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ கோரிக்கைக்கு அமைச்சர் பதில்

கருங்கல், மார்ச் 19:சட்டசபையில் நேற்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது: குமரி மாவட்டத்தில் மிக முக்கியமான கால்வாய் பத்மநாபபுரம் – புத்தனார் கால்வாய் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. அதேபோல நிறைய இடங்களில் உடைந்து கிடக்கிறது. உடைந்த பகுதிகளில் பக்கச்சுவர் ஏற்படுத்தி, புத்தனார் திக்கணங்கோடு கால்வாயை தூர்வாரித் தருமாறு பேரவைத் தலைவர் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து கூறியதாவது:

குறிப்பாக நம்முடைய உறுப்பினர் சொன்ன கால்வாய் மட்டுமல்ல, பொதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடுகிற ஆறுகள் எல்லாம் கடந்த பெருமழையால் கரைகள் அரிக்கப்பட்டு தெருவுக்கும், கரைக்கும், ஆற்றுக்கும் வித்தியாசம் தெரியாத நிலைமை நீள்கிறது. இதை ஒரு பெரும் முயற்சி எடுத்து, பெரும் திட்டத்தோடு, ஒவ்வொரு ஆற்றுக்கும் கால்வாய் அமைத்தால் தான் நாஞ்சில் நாடு வளமாக இருக்க முடியும். எனவே உறுப்பினர் சொன்னதை தனி கவனமாகச் செலுத்தி என்னவென்று கேட்டு சொல்லி ஆணைக்கு உட்படுத்துகிறேன் என்றார்.

The post குமரி மாவட்டத்தில் கால்வாய்களை சீரமைக்க தனி கவனம் சட்டசபையில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ கோரிக்கைக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Minister ,Rajesh Kumar MLA ,Assembly ,Kumari district ,Karungal ,Rajesh Kumar ,MLA ,Padmanabhapuram-Bhuttanar canal ,Bhuttanar canal… ,Dinakaran ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை