- நாகப்பட்டினம்
- பாஜக
- Tasmak
- அண்ணாமலை
- சென்னை
- புதிய பேருந்து நிலையம்
- டாஸ்மாக் முற்றுகைப் போராட்டம்
- தின மலர்
நாகப்பட்டினம், மார்ச் 18: சென்னையில் ஆர்ப்பட்டம் நடத்த முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய 30 பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு பாஜக சார்பில் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விஜேந்திரன் தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி முன்னிலை வகித்தார். தொடர்ந்து பாஜகவினர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். அப்போது டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்தும், அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட, 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
The post நாகப்பட்டினம் பாஜகவினர் டாஸ்மாக் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.
