×

ரூ.5 லட்சம் நிதியுதவி துணை முதல்வருக்கு கராத்தே ஹூசைனி நன்றி

சென்னை: கராத்தே ஹூசைனி வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில் கூறியிருப்பதாவது: நான் அதிமுகவை சேர்ந்தவன். இதுவரை எந்த அதிமுக பிரமுகரும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உட்பட யாருமே என்னை தொடர்பு கொள்ளவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதா எனக்கு பல உதவிகளை செய்துள்ளார். அவருடைய நம்பிக்கையை பெற்றவன் நான். அப்படி இருந்தும் இன்றைய அதிமுகவினர் என்னை புறக்கணித்து விட்டனர். ஆனால், தமிழக துணை முதல்வரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் எனது மருத்துவ செலவுகளுக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். எனது கடந்தகால அரசியலை பற்றி சிறிதும் யோசிக்காமல் உடனே எனக்கு உதவ முன்வந்த துணை முதல்வருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் என் நெஞ்சில் இருந்து நன்றிகளை தெரிவிக்கிறேன்.

The post ரூ.5 லட்சம் நிதியுதவி துணை முதல்வருக்கு கராத்தே ஹூசைனி நன்றி appeared first on Dinakaran.

Tags : Karate Hussaini ,Deputy Chief Minister ,Chennai ,AIADMK ,Edappadi Palaniswami ,O. Panneerselvam ,Chief Minister ,Jayalalithaa… ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...