×

எல்லோராலும் போற்றக்கூடிய தலைவர் கலைஞருக்கு சிலை வைத்து அரசு மரியாதை செய்யும்: புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: எல்லோராலும் போற்றக்கூடிய கலைஞருக்கு சிலை வைத்து அரசு உரிய மரியாதை செய்யும் என புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, அனிபால் கென்னடி(திமுக) அரசு வாக்குறுதி அளித்தபடி தலைவர் கலைஞருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதா? அதற்காக இடம் ஏதும் தேர்வு செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் திருமுருகன்: அரசு சார்பில் இதுவரை குழு அமைக்கப்படவில்லை. கலைஞருக்கு சிலை அமைப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது.
எதிர்கட்சி தலைவர் சிவா (திமுக): தவறான தகவலை அமைச்சர் கூறுகிறார். கடந்த ஆட்சியிலேயே குழு அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, இது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
முதல்வர் ரங்கசாமி: முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞருக்கு சிலை வைக்கும் எண்ணம் அரசுக்கு உண்டு. எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய தலைவர் கலைஞர். தமிழக மக்களுக்கும், தமிழுக்கும் அவர் ஆற்றிய பணி மிகப் பெரியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளால் பொதுஇடத்தில் சிலை வைக்க முடியவில்லை. நிச்சயமாக கலைஞருக்கு மரியாதை அளிக்கக்கூடிய நிலையில் அவரது பெயரை சூட்டுவதுடன் சிலையை தகுந்த இடத்தில் வைத்து அரசு மரியாதை செலுத்தும் என்றார்.

The post எல்லோராலும் போற்றக்கூடிய தலைவர் கலைஞருக்கு சிலை வைத்து அரசு மரியாதை செய்யும்: புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி உறுதி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangasamy ,Puducherry Assembly ,Puducherry ,Hour ,Anipaul ,Kennedy ,DMK ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்