×

தேரோட்டத்தையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை

அரூர், மார்ச் 18: தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் மாசி மக தேரோட்டத்தையொட்டி, அரூர் வருவாய் கோட்டத்திற்கு இன்று (செவ்வாய் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில், வரும் 29ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகும் என மாவட்ட கலெக்டர் சதீஷ் தெரிவித்துள்ளார். தேர் திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பஸ் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண்டுதோறும் தேரோட்டம் முடிந்த பின்பு, வாகனங்களை முறையாக அனுமதிக்காமல், மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும். நடப்பாண்டு அதனை தவிர்க்கும் வகையில், முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேரோட்டத்தையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Arur ,division ,Masi ,Theerthamalai Theerthagireswarar Temple ,Dharmapuri district ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்